‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கேரளத்தில் இருந்து இறக்குமதியான நடிகைகளில் நயன்தாரா மட்டும்தான் பிகினி ரேஞ்சுக்கு நடித்தார். மற்ற நடிகைகளெல்லாம் கவர்ச்சி என்றாலே காத தூரத்துக்கு தள்ளியேதான் நின்றனர். அமலாபால் போன்ற சில நடிகைகள் பட்டும்படாமலும் நடித்தனர். ஆனால் கும்கியில் வந்த லட்சுமிமேனனோ, இடை, தொடை என்று எதுவும் காட்ட மாட்டேன் என்று கறாராக பேசி நடித்து வந்தார்.
ஆனால், அப்படி கண்டிசன் போட்டு அவர் நடித்த படஙகள் வரிசையாக வெற்றி பெற்று வந்ததால், ராசியான நடிகையாக கருதப்பட்டு வந்த நிலையில, ஜிகர்தண்டா என்ற ஒரு படத்தின் தோல்வி லட்சுமிமேனனை முற்றிலுமாக சறுக்கி விட்டது. அதையடுத்து, தற்போது ஒரேயொரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த நிலையில், லட்சுமிமேனன் இடத்தை பிடிப்பதற்காக ஸ்ரீதிவ்யா முயற்சி எடுத்தார். ஆனால் அவரை கவர்ச்சி கண்ணோட்டத்திலேயே டைரக்டர்கள் பார்ப்பதால், வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று மாடர்ன் ரூட்டிலேயே பயணித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து, வெளுத்துக்கட்டு அருந்ததியோ, லட்சுமிமேனன் போன்ற நடிக்கத்தான் எனக்கு ஆசை. இப்போது நடித்துள்ள நாய்கள் ஜாக்கிரதை, தொட்டால் தொடரும் படங்களிலும் ஹோம்லியாகத்தான் நடித்திருக்கிறேன்.