சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'கத்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்ப் படத்தை இயக்குவதை தள்ளிப் போட்டு விட்டு ஹிந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏற்கெனவே, அந்தப் படத்திற்காக சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டார்கள். அதனால்தான், அடுத்து ஹிந்திப் படத்தை முடித்து விட்டு முருகதாஸ் தமிழ்ப் பக்கம் வருவார் என்கிறார்கள்.
2011ம் ஆண்டு சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி, இனியா நடித்து தமிழில் வெளிவந்த 'மௌனகுரு' படத்தைத்தான் முருகதாஸ் ரீமேக் செய்யவிருக்கிறார். அப்போது இந்தப் படம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம். சாந்தகுமாரின் திறமையான இயக்கத்தை விமர்சகர்கள், திரையுலகினர் உட்பட பலரும் வெகுவாகப் பாராட்டினார்கள். விறுவிறுப்பான திரைக்கதைக் கொண்ட இந்தப் படம் முருகதாசை வெகுவாகக் கவர்ந்த படமாம். அதனால்தான் அந்தப் படத்தை ரீமேக் செய்கிறேன் என முருகதாஸ் கூறியிருக்கிறாராம்.
ஹிந்தியில் நாயகிக்கு ஏற்ற விதத்தில் கதையைக் கொஞ்சம் மாற்றி படத்தை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் மூலம் அனிருத் ஹிந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். சோனாக்ஷி சின்ஹா ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் 'ஹாலிடே' ஹிந்திப் படத்தில் நாயகியாக நடித்தவர். ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.