Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எப்போதும் நான் வில்லிதான்! - டிவி நடிகை நிஷா பேட்டி

18 நவ, 2014 - 10:01 IST
எழுத்தின் அளவு:

டி.வி. தொடர்களில் ஹீரோயினி-வில்லி என இரண்டு வேடங்களில் எந்த வேடம் வேண்டும் என்று என்னைக்கேட்டால் வில்லி வேடத்தைத் தான் டிக் பண்ணுவேன். காரணம், ஹீரோயினிக்கு லிமிட் உண்டு, ஆனால் வில்லிக்கு லிமிட்டே கிடையாது. புகுந்து விளையாடலாம். அதனால்தான் வில்லி வேடத்துக்கே நான் முதலிடம் கொடுக்கிறேன் என்கிறார் நடிகை நிஷா.


தினமலர் இணையதளத்துக்காக அவரிடம் சில கேள்விகள்...


தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து நீங்கள் நடிகையானது ஏன்?


சேனல்களில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தபோது தொகுப்பாளினிதான் எனக்கு சரியாகப்பட்டது. அப்படி நான் நான்கு ஆண்டுகள் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தபோது, டி.வி. தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதை பார்த்த போதுதான் எனக்கும் சீரியல்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு, அழகி தொடரில் நடித்தேன். அந்த முதல் தொடரே என்னை பேச வைத்ததோடு, எனக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனால் இப்போது முழுநேர நடிகையாகி விட்டேன். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த வீடு தொடர் என்னை பட்டிதொட்டியெல்லாம் பேச வைத்துக்கொண்டிருக்கிறது.


உங்கள் நடிப்புக்கு நேயர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?


நமது நடிப்பை ரொம்பவே வாட்ச் பண்ணுகிறார்கள். முக்கியமாக வில்லி என்கிறபோது கதைக்காக நாம் செய்யும் அடாவடித்தனமான நடிப்பை நிஜமென்று நினைத்து உணர்ச்சிவசபபடுகிறார்கள். எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், நான் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லி, ஏன் ப்ரியா இப்படியெல்லாம் பண்றே -என்று என்னை திட்டுகிறார்கள். அந்த அளவுக்கு சீரியலை, நிஜ வாழ்க்கை போன்று நேயர்கள் நினைக்கிறார்கள். அதனால் வில்லியாக நடித்ததால் ஒரே சீரியலில் நான் ரீச் ஆகிவிட்டேன்.


டைட்டில் வேடங்களில் நடிக்கும் ஆசை உள்ளதா?


சீரியலைப் பொறுத்தவரை கதாநாயகிதான் பிரச்சினைகளை முறியடிப்பார். ஆனால் அவரை பிரச்சினைகளில் சிக்க வைப்பவர் வில்லியாகத்தான் இருப்பார். அந்த வகையில், எனனைக்கேட்டால் வில்லிதான் கதையையே நகர்த்தி செல்கிறார். அதனால், அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மேலும், கதாநாயகி என்றால் ஒரு லிமிட்டுக்குள்தான் நடிக்க முடியும். ஆனால் வில்லி என்கிறபோது லிமிட்டே கிடையாது. புகுந்து விளையாடலாம். அதனால் வில்லி வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன.


பக்கம் பக்கமாக வசனம் பேசுவதறகு முன்பு டயலாக்கை மனப்பாடம் செய்வீர்களா?


வில்லி வேடம் என்கிறபோது பவர்புல்லான வசனங்கள் இருக்கும். அதேசமயம், நெகட்டிவான ரியாக்சன் அதிகமாக இடம்பெறும். ஆனால் சில காட்சிகளில் நீங்கள் சொல்வது போன்று பக்கம் பக்கமாக வசனம் பேசவேண்டிய சூழலும் ஏற்படும். ஆனால் நான் மலையாளி என்பதால் எனக்கு தமிழ் படிப்பதில் பிரச்சினை உண்டு. அதனால் நான் நடிக்கும்போது ப்ராம்டிங் செய்யச்சொல்லி அதை கேட்டபடி நடித்து விடுகிறேன். அது எனக்கு எளிதாகவும் உள்ளது.


ப்ராம்டிங் முறையில் பேசி நடிக்கும்போது நடிப்பு சிதறாதா?


ப்ராம்டிங் என்பது நாம் ஒரு காட்சியில் நடிக்கிறபோது, நாம் பேச வேண்டிய வசனங்களை இன்னொருவர் சத்தமாக படிப்பார். அதை காதில் வாங்கியபடி பேசி நடிக்க வேண்டும். இது முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் போகப்போக பழகி விடும். இப்போது எத்தனை பெரிய வசன காட்சிகள் என்றாலும், ப்ராம்டிங் முறையில் சிறப்பாக நடித்து விடுகிறேன். மொழிப்பிரச்சினை உள்ள என்னைப் போன்ற நடிகைகளுக்கு அதுவே சிறந்த வழியாகவும் உள்ளது. இதனால் நடிப்பு சிதறுவதற்கு வாய்ப்பில்லை. தேவையான ரியாக்சனை கொடுத்து விட முடியும். அதோடு, ஒரு இரண்டு தடவை மானிட்டரில் ரிகர்சல் பார்த்து விடடுத்தான் டேக் செல்வேன்.


சமீபகாலமாக சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி விட்டீர்களே?


முன்பெல்லாம் டி.வியில் நடிப்பவர்களுக்கு சினிமாவில் மரியாதை இல்லாமல் இருந்தது. ஆனால். இப்போது டிவியில் முகம் காட்டுபவர்கள் சினிமாவில் பெரிய ஹீரோக்களாகி வருகிறார்கள். சீரியல் நடிகர்-நடிகைகளும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஏற்கனவே சீரியல்கள் மூலம் மக்களுக்கு நன்கு தெரிந்த முகமாக இருப்பதால் வரவேற்பும், மரியாதையும் அதிகரித்து வருகிறது. அதனால்தான், நானும் பூஜை உள்பட சில படங்களில் சிறிய வேடங்கள் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகிறேன். இன்னும் வெயிட்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் உள்ளது. இருப்பினும், டி.விக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன. டி.வி சீரியல்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் சினிமாவில் நடிபபேன் என்கிறார் நிஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in