ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாலி படத்தின் மூலம் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்த ஜோதிகா தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே 8 வருடமாக காதலித்து வந்த சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். 2007ம் ஆண்டு வெளிவந்த மொழி தான் அவர் கடைசியாக நடித்த முழுமையான தமிழ் திரைப்படம். தற்போது அதாவது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
நடிகர் திலீப்பை மணந்து கொண்டு செட்டிலான மஞ்சு வாரியார் 14 வருடங்களுக்கு பிறகு நடித்த மலையாளப்படம் படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ. நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண் நான் கொண்ட லட்சியத்தில் சாதிக்கிற கதை. அதாவது சாதிப்பதற்கு வயது தடையில்லை என்கிற கருத்தை மையமாக கொண்ட கதை.
இதனை தமிழில் ரீமேக் செய்கிறார் சூர்யா. தனது டி2 நிறுவனத்தின் சார்பில் இதனை தயாரிக்கிறார். இதில் மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். குஞ்சாக்கோ போப்பன் நடித்த கேரக்டரில் ரகுமான் நடிக்கிறார். மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரீவ்ஸ் தமிழிலும் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்புகள் இன்று (நவ 17) புது டில்லியில் உள்ள கவர்னர் மாளிகையில் தொடங்கியது. படத்தின் கிளைமாக்சை இங்கு படமாக்குகிறார்கள். கதைப்படி வாழ்க்கையில் லட்சியத்தில் ஜெயித்த ஜோதிகா ஜனாதிபதியிடம் விருது வாங்குவார். அந்த காட்சிகள் இங்கு எடுக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.