'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை அனுஷ்கா சர்மா, அமீர்கான் உடன் நடித்து வரும் படம் பி.கே. இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையே நடிகையான அனுஷ்கா, தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அவர் தயாரித்து வரும் முதல்படம் ''என்.எச் 10''. இப்படத்தில் அவரே ஹீரோயினாகவும் நடிக்கிறார். நவ்தீப் சிங் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தனது முதல் தயாரிப்பு படத்தின் டிரைலரை பிரபலமான ஒருவரது படத்துடன் வெளியிட நினைத்தார் அனுஷ்கா. அதன்படி, தான் அமீர்கான் உடன் நடித்து வரும் பி.கே. படத்தினுடன் தனது பட டிரைலரை வெளியிட எண்ணினார். இதுதொடர்பாக அமீர்கான் மற்றும் பி.கே. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் பேசினார். இருவரும் ஓ.கே., சொல்ல இப்போது படத்தின் டிரைலரை உருவாக்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் அனுஷ்கா.