தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
3 இடியட்ஸ், பாபி ஜசூஸ் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் அலி பாசல். இவர் இப்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக கேப் டவுன் சென்றுள்ளார். இதேப்போல் நடிகை வித்யாபாலனும் தான் நடித்து வரும், ஹமாரி அதுரி கஹானி படத்தின் படப்பிடிப்புக்காக அதே ஊருக்கு சென்றுள்ளார். வித்யாபாலனும், அலி பாசலும் பாபி ஜாசூஸ் படத்தில் நடித்துள்ளனர். அந்த நட்பின் காரணமாக வித்யாபாலன், ஷூட்டிங்கிற்காக கேப்டவுன் வந்திருப்பதை அறிந்த அலி பாசல், எந்தவொரு முன் அறிவிப்புமின்றி வித்யாபாலனை ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து சந்தித்துவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து அலி பாசல் கூறுகையில், ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்தேன், இருந்தாலும் வித்யாபாலனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இறுதியாக நான் ஊருக்கு கிளம்புவதற்கு முன்பாக உடை உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றேன். அப்போது வித்யாபாலன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அருகில் நடப்பதாக கேள்விப்பட்டேன், உடனடியாக நான் அவரை சென்று சந்தித்தேன். ஆனால் இயக்குநர் மோகித் சூரியை சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.