ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 'ஒக்கடு' படம் சூப்பர் ஹிட்டாக, தமிழில் விஜய் நடிப்பில் 'கில்லி' என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. தமிழிலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் இப்போது இந்தியில் 'தீவர்' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் அர்ஜூன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் கபடி ஒரு முக்கியமான பிரதானமாக விளங்குகிறது. அதனால் கிட்டத்தட்ட 25 நாட்கள் கபடி விளையாட முறையாக பயிற்சி பெற்று நடித்துள்ளார் அர்ஜூன் கபூர். இதற்காக படக்குழு சார்பில் அர்ஜூன் கபூருக்கு ஸ்பெஷலான கபடி மாஸ்டர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரின் ஆலோசனை மற்றும் பயிற்சியின் உதவியுடன் தீவரில் நடித்து வருகிறார் அர்ஜூன் கபூர். இப்படத்தை அர்ஜூனின் அப்பா போனி கபூர் தயாரிக்கிறார்.