பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை வித்யாபாலன். இவர் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது கல்யாண வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் சிறப்பாக சென்று கொண்டுகிறது. இந்நிலையில், வித்யாபாலன் தனது பெற்றோர்கள், சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்களை ரொம்பவே மிஸ் செய்கிறாராம். இதன்காரணமாக தற்போது தன் கையில் இருக்கும் படங்களை எல்லாம் விரைவில் முடித்து அம்மா மற்றும் சகோதரி உள்ளிட்ட குடும்பத்தாருடன் தனது விடுமுறையை கொண்டாட திட்டமிட்டுள்ளார் வித்யாபாலன்.