அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்காவின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோதே, இடையிடையே எடிட்டிங் வேலைகளை 90 சதவிகிதம் முடித்து விட்டனராம்! பிறகு பாக்கி எடிட்டிங் வேலையை முடித்துள்ளனர்.
எடிட்டிங் முடிந்ததும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை அவர் பேசி முடித்துள்ளார்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கூடிய விரைவிலேயே இப்படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு வேலையை தொடங்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். எனவே, நேற்று இரவு லிங்கா படத்தை அவர் பார்த்திருக்கிறார்.
இதற்கிடையில், வருகிற 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிற படத்தின் இசை வெளியீட்டுக்கான வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளது.