மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பொங்கலுக்கு இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படம் எது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
வீரம் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.
ஹீரோ அஜித், இயக்குர் சிவா என்பதைத் தவிர இப்படம் குறித்த வேறு எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
ஹன்சிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. பிறகு ஹன்சிகா நடிக்கவில்லை என்பதாக விளக்கம் அளித்தார் இயக்குநர் சிவா.
ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தயாரித்த ஏ.எம். ரத்னமே இப்படத்தைத் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தை தயாரிப்பவர்கள் பட்டியலில் பிவிபி, ஏஜிஎஸ், விஜயா புரொடக்ஷன்ஸ், திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இருந்தன. இவர்களுக்கிடையே நடந்த போட்டியில் கடைசியில் ஏ.எம்.ரத்துக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
இது ஒருபுறமிருக்க இப்படத்திற்கு இசையமைக்கப்போவது யார்? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அனிருத்திற்கு இந்த வாய்ப்பு கிடைக்க அதிக சாத்தியம் இருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.
கத்தி படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு அனிருத் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய்யுடனும், அஜித்துடனும் படம் செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
இதனால் விஜய்யின் கத்தி படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் அஜித் படத்திலும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் கத்தி மட்டுமே உறுதியானது, கௌதம் படத்திற்கு ஹாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
எனவே, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதேநேரம், டி.இமான் பெயரும் அஜித் பட இசையமைப்பாளர் பட்டியலில் இருக்கிறதாம்.
இந்த தகவல்கள் அனைத்தும் உறுதிப்படாத தகவல்களே..
என்னை அறிந்தால் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவுற்ற பின்பே இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகுமாம்.