ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கான், அமீர் கான் இணைந்து நடித்த அன்தாஸ் அப்னே அப்னே படம் 1994ம் ஆண்டு வெளியானது. ஆனால் இந்த படம் அந்த சமயத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை தற்போது, இந்த காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த மாதம் இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
காமெடி கலந்த ரொமான்டிக் படமான இந்த படம் 70 எம்.எம்.,ல் மீண்டும் ஒருமுறை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வர உள்ளது ரசிகர்களிடம் பெருந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரவீணா டன்டாண் மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். ரசிகர்கள் இந்த படத்தை உற்சாகத்துடன் எதிர்பார்த்திருந்தாலும், அந்த படத்தில் நடித்த அமீர்கான் இந்த செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளாராம்.
இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்வதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறும் அமீர்கான் அதற்கான காரணம் எதையும் இதுவரை கூறவில்லையாம். இருப்பினும் 20 ஆண்டுகளுக்கு பின் இந்த படம் நவம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் உறுதியாக தெரிவித்துள்ளனராம்.