சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
சந்தானம் நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர் ஆஷ்னா சாவேரி. அந்த படத்தில் இவர் பர்பாமென்ஸ் பண்ண பெரிய அளவில் காட்சிகள் கொடுக்கப்படவில்லை. அதோடு படமும் தோல்வியடைந்ததால் கவனிக்கப்படாத நடிகையாகி விட்டார் ஆஷ்னா. அதனால் மீண்டும் தனது தாய்வீடான மும்பைக்கு திரும்பி விட்ட அவர், மாடலிங் துறையில் கவனத்தை திருப்பியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீணடும் தான் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கும் ஆஷ்னா சவேரியையே புக் பண்ணி அவருக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார் சந்தானம். அதோடு, முந்தைய படத்தை விட இந்த படத்தில் அவரை பக்கா கமர்சியில் நடிகையாக்கும் முயற்சியும் நடக்கிறதாம.
அதாவது, முதல் படத்திலேயே பாடல் காட்சிகளில் ஓரளவு கவர்ச்சி அலை வீசிய ஆஷ்னா, இந்த படத்தில் கவர்ச்சி பேரலையாய் உருவெடுக்கப் போகிறாராம். சந்தானம் படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்குமா? என்று கேட்டால், முதல் படத்தை விட இந்த படத்தில் காமெடி இருந்தாலும் மசாலாவை அதிகமாக சேர்த்திருப்பதால், ஆஷ்னாவின் கவர்ச்சிக்கு நிறைய வேலை கொடுக்கப்போகிறார்களாம்.
ஆரம்பத்தில் இது சரி வருமா? என்று தயங்கி நின்ற ஆஷ்னா சாவேரியிடம், நீ இதற்கு தயங்கினால் மற்றவர்கள் உனக்கு சான்ஸ் தர தயங்குவார்கள் என்று ஆஷ்னாவுக்கு தொழில் ரகசியங்களை புரிய வைத்து களத்தில் இறக்கி விட்டிருக்கிறாராம் சந்தானம்.