'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்னேஷ் தயாரித்து நடித்துள்ள படம் அவன் அவள். க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை ராம்கிருஷ் மிர்னாலி இயக்கியிருக்கிறார். விக்னேசுக்கு ஜோடியாக மலையாள நடிகை தேவிகா மாதவன் நடித்துள்ளார். அவர்களுடன் சந்திரிகா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரவி ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சமீபகாலமாக நெகடீவ் ஹீரோவாகவும் நடித்து வரும் விக்னேஷ். இந்த படத்தில் மனைவியை கொலை செய்து விடும் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எதற்காக கொலை செய்கிறார். அதன் பிறகு அவர் என்னவாகிறார். அவர் சந்திக்கும் பெண்கள் மீது அவருக்கு எந்த மாதிரியான எண்ணம் ஏற்படுகிறது என்பதை பக்கா கமர்சியல் கதையாக சொல்லப்பட்டிருக்கிறதாம்.
மேலும், அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்து சமீபத்தில் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அவன் அவள் படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம். அதனால் அடுத்தக்கட்டமாக படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். தற்போது தீபாவளி படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படங்கள் ஓடி முடிக்கிற நேரத்தில் வெளியிடும் யோசனை உள்ளதாம். அதனால் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் அவன் அவள் படம் திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.