ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரன் நடிக்கும் கொம்பன் படத்தை குட்டிப்புலி முத்தையா இயக்குகிறார். இது மாமனார் மருமகன் உறவின் மேன்மையை சொல்லும் கதை என்கிறார் கார்த்தி.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மதுரை கதைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் மதுரையை விட்டு விலகி நிற்கும் ராமநாதபுரத்து கதை. மதுரைக்கு தெற்கால எல்லா ஊரும் மதுரை மாதிரிதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா ரொம்பவே வித்தியாசமா இருக்கு. தாயால் வளர்க்கப்பட்ட எனக்கும், தந்தையால் வளர்க்கப்பட்ட லட்சுமிமேனனுக்கும் உள்ள காதல்தான் மெயின் கதை என்றாலும். இதுவரை யாரும் சொல்லாத மாமனார் மருமகன் உறவின் மேன்மையை சொல்கிறோம்.
இந்த உறவுக்குள் கோப தாபங்கள், அன்புகள் நிறைந்து கிடக்கும். ஆனால் அன்பை மட்டும்தான் வெளிப்படுத்துவார்கள். எனது மாமனாராக ராஜ்கிரண் சார் நடிக்கிறார். சினிமாவோட ஆணி வேரையே பார்த்தவர். அவரு "தம்பி இந்த கேரக்டருக்கு நீங்க பொருத்தமா இருக்கீங்க"ன்னு சொன்னதே விருது கிடைச்ச மாதிரி இருந்தது. பார்வையிலேயே எல்லாத்தையும் சொல்லிவிட்டு போகிற பெண்ணாக லட்சுமி மேனன் நடிச்சிருக்காங்க. பருத்தி வீரனுக்கு பிறகு எனக்கு பெயர் சொல்லும் ஒரு வில்லேஜ் படம் அமைஞ்சதுல சந்தோஷமா இருக்கேன் என்கிறார் கார்த்தி.