நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பல படங்களில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்த கலையரசன் மெட்ராஸ் படத்தின் மூலம் பாப்புலரானார். அவரது யதார்த்தமான சென்னை இளைஞர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கார்த்தி கேரக்டருக்கு இணையான கேரக்டராக இருந்தது.
தற்போது கலையரசனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளரும் எழுத்தாளருமான அஜயன்பாலா இயக்கும் மைலாஞ்சி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார் கலையரசன். ஏ.எல்.விஜய் படத்தை தயாரிப்பதோடு திரைக்கதையும் அமைக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. கிஷோர், ஈஸ்வரிராவ், எழுத்தளர் வேலா ராமமூர்த்தி (மதயானைகூட்டம் வில்லன்) முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் தன் படம் தவிர அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். காதல் படத்தோடு காணாமல் போன ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.