'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1983-ம் ஆண்டு சுபாஷ் கை இயக்கத்தில், ஜாக்கி ஷெரப், மீனாட்சி சேசாத்திரி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஹீரோ. கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை மீண்டும் ரீ-மேக் செய்ய இருக்கின்றனர். சல்மான் கான், சுபாஷ் கை ஆகியோரது கூட்டு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார். ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் ஹீரோவாகவும், சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஜாக்கி ஷெரப்பை அணுகியுள்ளனர். இதுகுறித்து ஜாக்கி ஷெரப் கூறுகையில், ஹீரோ படத்தில் நடிக்க என்னிடம் பேசியுள்ளனர், ஆனால் நடிப்பது பற்றி இன்னும் உறுதியாக முடிவு எடுக்கவில்லை. என் வாழ்க்கையில் ஹீரோ ரொம்ப ஸ்பெஷலான படம், நல்ல வேடமாக இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.