'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், தான் நடித்து வரும் பி.கே., படத்திற்காக சாதாரண மக்கள் உபயோகித்த ஆடையை வாங்கி நடித்துள்ளார். தூம்-3 படத்தின் வெற்றிக்கு பிறகு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ''பிகே'' படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மா ஹீரோயின். முற்றிலும் வித்தியாசமான ரோலில் அமீர்கான் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியான போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான பிகே படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிகே படத்தில் அமீர்கான் உபயோகித்த ஆடைகள் எல்லாம் காஸ்ட்யூம் டிசனரால் வடிவமைக்கப்பட்டது கிடையாதாம். சாதாரண மக்கள் பயன்படுத்திய ஆடையை தான் வாங்கி அமீர்கான் நடித்திருக்கிறார். உதாரணமாக, பிகே., படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தானில் நடந்தபோது, அங்கு தெருக்களில் வாழ்ந்த சாதாரண மக்களின் ஆடைகளை வாங்கி இப்படத்திற்கு உபயோகப்படுத்திவிட்டு அதற்கு பதில் அவர்களுக்கு பணமோ, புதிய உடையோ வாங்கி கொடுத்துள்ளனர்.