'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கரண் ஜோகர் இயக்கம்-தயாரிப்பில், 2012-ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். நடிகை ஆலியாபட்டிற்கு முதல் படம் இது. வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். கரண் ஜோகர் ஏற்கனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது அதற்கான வேலைகளை துவங்கியிருக்கிறார். ஸ்டூடண்ட் ஆப் தி இயர் இரண்டாம் பாகத்தில், டைகர் ஷெரப் முன்னணி ரோலில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் டைகர் ஷெரப்பை சந்தித்து பேசியிருக்கிறார் கரண் ஜோகர். டைகரும் சம்மதம் சொல்லியதாக தெரிகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகளை கரண் ஜோகர் வெளியிடுவார் என தெரிகிறது.