தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கத்தி, ஐ படங்களின் பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, ரஜினி ரசிகர்களோ லிங்கா படத்தின் பாடல்களுக்காக அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். லிங்கா படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும், இல்லை இல்லை பொங்கலுக்குத்தான் ரிலீஸ் என்றும் மாறுபட்ட தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
லிங்கா படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராதநிலையில், லிங்கா இசைவெளியீடு குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. நவம்பர் 14 அன்று லிங்கா படத்தின் இசைவெளியாகவிருப்பதாக வந்த தகவலுக்கு மாறாக, லிங்கா படத்தின் பாடல்களை வரும் நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் லிங்கா தயாரிப்பாளர்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல்கள் உருவாகியிருப்பதால் லிங்கா ஆல்பத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த ஐ, காவியத்தலைவன் ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியிருப்பதால், லிங்காவும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் லிங்கா படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. சென்னையில் உள்ள முன்னணி ஆடியோ கம்பெனிகள் லிங்கா ஆடியோரைட்ஸ் கேட்டு அணுகியும், சௌந்தர்யா ரஜினி வேலை பார்க்கும் மும்பையைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனத்துக்கு ஆடியோ ரைட்ஸை விற்றிருக்கிறார்கள். இந்த டீலை முன்னின்று முடித்தவர் சௌந்தர்யா ரஜினிதானாம்.