Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துக்கு 'மங்காத்தா'...சூர்யாவுக்கு 'மாஸ்' ஆ...

25 அக், 2014 - 15:15 IST
எழுத்தின் அளவு:

குட்டிக் குட்டி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த வெங்கட் பிரபு, அப்படியே விளையாட்டாக கிரிக்கெட்டை வைத்து இயக்கிய 'சென்னை 28' படம் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 'சரோஜா, கோவா,' என அவருடைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படத்தை இயக்கினார். அதன் பின் அஜித்தை வைத்து இயக்கிய 'மங்காத்தா' படம் வெற்றியடைந்து அஜித்துக்கும் திருப்புமுனையான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கு முன்னர் வரை, அஜித் நடித்த 14 படங்களில் “வில்லன் மற்றும் பில்லா” படங்கள் மட்டுமே மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. 'மங்காத்தா' படத்திற்கு முன்னதாக அஜித் நடித்த 'ஏகன், அசல்' இரண்டு படங்களுமே தோல்விப் படமாக அமைந்தது. வெங்கட் பிரபு, 'மங்காத்தா' படத்தில் அஜித்தைப் புதியதாக 'சால்ட் அன்ட் பெப்பர்' தோற்றத்தில் நடிக்க வைத்து அவருக்கும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதோ போல் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் சூர்யாவுக்கு இதற்கு முன் வெளிவந்த “அஞ்சான், மாற்றான், 7ம் அறிவு” ஆகிய படங்களும் வியாபார ரீதியாக தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன. அஜித்துக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்தது போல், சூர்யாவுக்கு இப்போது வெங்கட் பிரபு 'மாஸ்' படம் மூலம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுப்பாரா என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. தீபாவளியன்று வெளியான 'மாஸ்' படத்தின் முதல் பார்வை சர்ச்சையைக் கிளப்பினாலும், அந்த போஸ்டர் டிசைன் பலரும் பயன்படுத்தும் 'மக் ஷாட்' எஃபெக்டில் டிசைன் செய்யப்பட்டதுதான் என பதிலளித்துள்ளார். இப்போதைக்கு அவர் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளதால் 'அஞ்சான்' படத்தைப் போன்று 'மாஸ்' போஸ்டரை யாரும் பெரிதாகக் கிண்டலடிக்கவில்லை. ஆனால், 'கத்தி' படத்தைப் பற்றி வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி அமரன் கிண்டலடித்து வருவதாலும், வெங்கட் பிரபுவே, லிங்குசாமிக்கு ஆதரவாக சில வாரங்களுக்கு முன் கருத்தை வெளியிட்டதாலும், 'மாஸ்' படம் வரும் போது விஜய் ரசிகர்கள் அவர்களை 'தெறி'க்க ஓட வைப்பார்களோ என்ற ஒரு அச்சம் சமூக வலைத்தள பயனாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in