'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் சகுணி படத்தில் நடித்தவர் ப்ரணிதா. நல்ல அழகும், திறமையும் இருந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனவர். பிசியாக இல்லாவிட்டாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அத்தரண்டிக்கி தாரேடி படம் ஹிட்டானது. அதில் சமந்தாதான் ஹீரோயின் என்றாலும் ப்ரணிதாவின் கேரக்டரும் பாப்புலர் ஆனது.
அதைத் தொடர்ந்து திரி விக்ரம் படத்தில் சமந்தாவுடன் செண்ட் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஹீரோ அல்லு அர்ஜுன். இயக்குனர் திரிவிக்ரம் கதையில் திடீரென சில மாற்றங்களை செய்தார். பின்பு ஆத் சர்மாவை இன்னொரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். உடனே எல்லோரும் ப்ரணீதா மூன்றாவது ஹீரோயின் என்று நினைத்தார்கள்.
சமந்தா, ப்ரணிதா, அல்லு அர்ஜுன் இணைந்து வரும் பல காட்சிகள் படத்தில் இருக்கிறதாம். இதில் அல்லு அர்ஜுன், சமந்தாவைவிட ப்ரணிதா உயரமாக இருக்கிறாராம். இதனை ஹீரோ அல்லு அர்ஜுன் விரும்பாததால் ப்ரணிதா நீக்கப்பட்டு, ஆத் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.