தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் இளம் நடிகையான பரிணீதிக்கு சோப்ராவுக்கு அக்., 22ம் தேதி பிறந்தநாள். இவருக்கு பாகிஸ்தானின் பாரம்பரிய உடையை பரிசளித்துள்ளார் நடிகர் அலி ஜாபர். அலி ஜாபர் தற்போது பரிணீதியுடன், ''கில் தில்'' படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட நட்பால் அவருக்கு இந்த உடையை பரிசளித்து இருக்கிறார் அலி ஜாபர். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பரணீதி அழகானவர், அன்பானவர், நல்ல பாடகர், உண்மையானவர், கில் தில் படப்பிடிப்பில் எப்போதும் நாங்கள் கலகலப்பாக இருப்போம். அவருடைய பிறந்தநாளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி எனது நண்பர் ஒருவர் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். அவரிடம் சொல்லி பரிணீதிக்காக பாகிஸ்தானின் பாரம்பரிய உடையை வடிவமைத்து அவருக்கு பரிசாக கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.