மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் நடிப்பதற்கு குட்பை சொன்ன நடிகைகளை மீண்டும் மேக்கப்போட வைத்திருக்கிறது ஒரு கதை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் கதைதான் அது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது.
ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா நடிப்பில் தமிழிலும் ரீ-மேக்காகிறது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்படத்தின் மூலம் தனது செகன்ட் இன்னிங்ஸை தொடங்குகிறார். மஞ்சு வாரியரை போன்று இப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறார் ஜோதிகா. மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் சூர்யாவின் 2டி பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
தமிழில் ரீமேக் ஆவதை அடுத்து ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. ஹிந்தியில் இப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க, அவரது மனைவி கஜோல் நடிக்க இருக்கிறார். அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த கஜோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் ரீ-எண்ட்ரியாகிறார். இப்படி ஒரே படத்தின் மூலம் மூன்று பிரபல ஹீரோயின்கள் சினிமாவில் ரீ-என்ட்ரியாவது ஆச்சர்யம்தான்.