'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய காலத்தில் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து முடித்த உடனேயே அந்தப்படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிடுவார். ஆனால் நடிகர் அர்ஜூன் கபூரோ தனது தீவர் படம் வெளியாகும் வரை எந்தப்படத்திலும் நடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசான அர்ஜூன் கபூர் கன்டே, 2 ஸ்டேட்ஸ், பைண்டிங் பேனி போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்து இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தீவர். இப்படத்தை போனி கபூர் மற்றும் சஞ்சய் கபூர் தயாரித்துள்ளனர். இப்படம், அர்ஜூன் கபூரின் குடும்ப படம் என்றே சொல்லலாம். இப்படத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்ய படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்க இருக்கிறார் அர்ஜூன்.
இதுகுறித்து அர்ஜூன் கபூர் கூறியுள்ளதாவது, மற்ற படங்களை போல் தீவர் படம் கிடையாது, இது எனது குடும்ப தயாரிப்பில் உருவாகியுள்ள படம். அதனால் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு பங்கு உண்டு. தீவர் படம் தியேட்டரில் வெளியாகும் வரை வேறு எந்தப்படத்திலும் நான் நடிக்கபோவதில்லை. இப்படத்தின் புரொமோஷனுக்காக பல்வேறு புதிய விளம்பர யுக்திகளை கையாள இருக்கிறேன். தற்போது தீவர் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக டிரைலரை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தீவர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகளிலும், புரொமோஷன் வேலைகளிலும் கண்டிப்பாக நான் மிஸ்ஸாக மாட்டேன் என்று கூறியுள்ளார்.