இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நேற்று 'கத்தி, பூஜை' ஆகிய படங்கள் மட்டுமே வெளிவந்தன. புலிப்பார்வை படம் எங்கு திரையிடப்பட்டுள்ளது என்பதை அவர்களே அறிவிக்கவில்லை. தீபாவளி போட்டி என்னவோ 'கத்தி, பூஜை' படங்களுக்கிடையே மட்டும்தான். இந்த நல்ல நாளில் தங்களது திரைப்படம் சம்பந்தமாக ஏதாவது ஒரு விஷயம் வெளிவந்தே ஆக வேண்டும் என பலரும் டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட் லுக், செகன்ட் லுக் என பலவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அப்படி வெளியான சில முக்கிய திரைப்படங்களின் விளம்பர விஷயங்கள் இதோ...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் நடிக்கும் 'அனேகன்' படத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டார்கள். ஆனால், இந்த டீசர் ஒரு நிமிடத்திற்கும் மேலாக இருந்ததுதான் ஆச்சரியம். அதை டிரைலர் என்றே சொல்லியிருக்கலாம். அடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா மற்றும் பலர் நடித்துள்ள 'காவியத் தலைவன்' படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். சரண் இயக்கத்தில் வினய் நடிக்கும் 'ஆயிரத்தில் இருவர்' படத்தின் டீசரும் வெளியானது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படத்தின் செகன்ட் லுக்கை வெளியிட்டார்கள்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக நடிக்கும் 'மாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மேலும், பல புதிய படங்களின் தீபாவளி வாழ்த்துக்களுடன் பல விளம்பரங்கள் வெளியானது.
அஜித் தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பாவது வெளியிடப்படும் என அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள், ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை.