'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷங்கரின் உதவியாளர் கார்த்திக், கப்பல் என்ற படத்தை இயக்கி உள்ளார். அவரது நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். வைபவ் ஹீரோ, சோனம் பாஜ்வா என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர கருணாகரன், வி.டி.வி கணேஷ் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஷங்கரின் எஸ் பிச்சர்ஸ் வெளியிடுகிறது.
இதன் சிங்கிள் டிராக் ஆடியோ வெளியீடு சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூ வணிக வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. இயக்குனர் ஷங்கர் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். "ஒரு கப் ஆசிட்..." என்ற சிங்கிள் பாடலை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.
இந்த விழாவில் இயக்குனர் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், பிரேம் சாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்டாக்டோ என்ற சர்வதேச இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.