தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபாவளி என்றாலே சேனல்கள் நம்பி இருப்பது சினிமாவைத்தான். புத்தம் புதிய படங்கள், நட்சத்திரங்களின் பேட்டிகள், கொண்டாட்டங்கள் என சினிமாவை கொண்டே நிரப்பி விடுவார்கள். யார் மிகவும் புதிய படத்தை ஒளிபரப்புகிறார். யார் மாஸ் படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்கிற போட்டி நடக்கும். அந்த ஆண்டு தாங்கள் வாங்கியிருக்கும் திரைப்படங்களில் உயர்ந்ததை தீபாவளிக்கு ஒளிபரப்புவார்கள். தீபாவளி படத்தை 20 முதல் 25 கோடி வரை கொடுத்து வாங்குகிறார்கள். தீபாவளி நிகழ்ச்சிகளை இரண்டு மாதத்திற்க முன்பிருந்தே தயாரிக்க தொடங்கிவிடுவார்கள்.
புதுபடங்கள்
இந்த தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடித்து சவுந்தர்யா ரஜினி இயக்கிய அனிமேஷன் படமான கோச்சடையான் ஒளிபரப்பாகிறது. பெரிய வெற்றி பெற்ற சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் 2, சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஹன்சிகாவுடன் நடித்த மான் கராத்தே, விஷால், லட்சுமிமேனனுடன் நடித்த பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், விஜய் நடித்த மாஸ் படமான ஜில்லா. விமல் லட்சுமிமேனன் நடித்த மஞ்சப்பை உள்ளிட்ட படங்கள் ஒளிபரப்பாகிறது.
பேட்டிகள்
தீபாவளி ரிலீஸ் படங்களான கத்தி, பூஜை படக் குழுவினரின் கலந்துரையாடல், சிறப்பு பேட்டிகள் முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதுதவிர ஷங்கர், த்ரிஷா, சரத்குமார், ஜி.வி.பிரகாஷ்குமார், ஹரி, பிரபு சாலமன், எஸ்.பி.ஜனநாதன், ஆகியோரின் சிறப்பு பேட்டிகள் ஒளிபரப்பாகிறது.
நிகழ்ச்சிகள்
சமீபத்தில் நடந்த ஐ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, இந்த ஆண்டு தலைத் தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்களின் பேட்டிகள், சில தனியார் திரைப்பட விருது வழங்கும் விழாக்கள் ஆகியவையும் ஒளிபரப்பாகிறது. வழக்கம்போல எல்லா சேனல்களும் சிறப்பு பட்டிமன்றங்களை ஒளிபரப்புகிறது. மிகச் சில தொலைக்காட்சிகள் போனால் போகட்டும் என்று தீபாவளியை பற்றிய சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
அப்புறம் என்ன ரிமோட் எடுங்க... கொண்டாடுங்க...