தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் விஜய் படத்திற்கு எந்தளவுக்கு மாஸ் இருக்கிறதோ... அதே அளவு மாஸ் கேரளாவிலும் இருக்கிறது. அங்குள்ள மம்மூட்டி, மோகன்லால் படங்களை போலவே விஜய்யின் படத்தையும் கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் ஓடும் ரயில்கள், பஸ்களில் எல்லாம் விஜய்யின் படங்களின் போஸ்டரை ஒட்டியுள்ளனர். விஜய்யின் கத்தி படம் தீபவாளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படம் கேரளாவிலும் ரிலீஸாக உள்ள நிலையில், கத்தி படத்திற்கான புரொமோஷன் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது. கேரளாவில் பேருந்து, ரெயில்களில் இப்படத்திற்கான புரொமோஷன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் உருவான ஒரு படத்திற்கு கேரளாவில் இந்த அளவுக்கு விளம்பரம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதுவரை தமிழில் உருவான எந்த படத்திற்கும் கேரளாவில் இந்தளவுக்கு விளம்பரம் செய்யப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.