ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். சிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்தபோதே அவர் சொன்ன கதையைக் கேட்டு ஓகே சொன்னார் அஜீத். வீரம் படம் வெளியாகி வெற்றியடைந்ததும் சில நாட்கள் ஓய்வுக்குப்பிறகு, அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கினார் சிவா. தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.
சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்துடன் சந்தானமும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் சந்தானத்திற்கு சிறிய கேரக்டர்தான் தரப்பட்டிருந்தது. தற்போது இயக்கும் படத்தில் சந்தானத்திற்கு அஜீத்துடன் படம் முழுக்க வருவதுமாதிரியான கேரக்டரை உருவாக்கியிருக்கிறாராம் சிவா. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரம், அஜீத் சிவா இணையும் படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்ற தகவலும் அடிபடுகிறது.
தல 56 படத்திற்கு தயாரிப்பாளர் யார்?