பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பேங் பேங் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன். இந்த மகிழ்ச்சியுடனேயே சிறிதும் ஓய்வு இன்றி தனது அடுத்தபடத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் ஹிருத்திக். ஹிருத்திக், அடுத்தப்படியாக ''மொகஞ்சதரோ'' படத்தில் நடிக்கிறார். இப்படம் மொகஞ்சதரோ நாகரீக பின்னணியில் உருவாக இருக்கிறது. இதில் அரசராக நடிக்கிறார் ஹிருத்திக். இந்தப்படத்திற்காக நடிக்கும் முன்பே அந்த நாகரீகம் பற்றி பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டு நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்காக தனது உடல் எடையை பிட்டாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். ஏற்கனவே உடம்பை பிட்டாகவும், அழகாகவும் வைத்திருக்கும் நடிகர் ஹிருத்திக், இப்படத்திற்காக தனது உடலை மேலும் பிட்டாகவும், அழகாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இப்படம் 2016-ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.