ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் 'கில்லாடி' ஸ்டாரான அக்ஷ்ய் குமார், தற்போது ''தி ஷாக்கீன்ஸ்'' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறவர், இப்படத்தில் நடிகர் அக்ஷ்யாகவே நடிக்கிறார். மேலும், இப்படத்தில் தனக்கான ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து காஷ்ட்யூம் வேலைகளையும் அவரே செய்கிறார். இதற்கு இயக்குநரும் ஓ.கே. சொல்லிவிட்டார். இதுகுறித்து இயக்குநர் அபிஷேக் சர்மா கூறுகையில், ஷாக்கீன்ஸில், அபிஷேக் நடிகராக வருகிறார். அதனால் தானே தனக்கு காஸ்ட்யூம் செய்கிறேன் என்றார். அவரது யோசனை எனக்கு பிடித்து இருந்தது, மேலும் அவர் உருவாக்கி ஆடைவடிவமைப்பும் நன்றாக இருந்தது, அதனால் அவரே செய்யட்டும் என்று விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
''தி ஷாக்கீன்ஸ்'' படம் 1982-ம் ஆண்டு வெளிவந்த 'ஷாக்கீன்ஸ்' படத்தின் ரீ-மேக் ஆகும். தற்போது உருவாகி வரும் ஷாக்கீன்ஸ் படத்தில் அனுபம் கெர், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா, லிசா ஹைடன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அக்ஷ்ய் குமார் சிறப்பு தோற்றத்தில், நடிகர் அக்ஷ்ய் குமாராகவே நடிக்கிறார்.