ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2-ஸ்டேட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான அர்ஜூன் கபூர், சமீபத்தில் லிக்கர் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்தார். இந்த விளம்பரத்திற்காக அர்ஜூன் கூடுதலாக உழைத்து இருக்கிறார். ஏற்கனவே இவர் வயதான தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் இப்போது இந்த விளம்பரத்திற்காக மிகவும் குண்டான மனிதராக நடித்திருக்கிறார். அர்ஜூன் கபூருக்கு குண்டான தோற்றம் ஒன்றும் புதிதல்ல, இவர் ஏற்கனவே குண்டாக இருந்து, தற்போது தான் உடல் எடையை குறைத்து இருக்கிறார். முன்னதாக அர்ஜூன் குண்டாக இருந்த சமயம், சல்மான் கான் தான் அவரை ஸ்லிம்மாக மாற்ற சில யோசனைகள் தந்தாராம். அவரது ஆலோசனை படி உடல் எடையை குறைத்து இருக்கிறார் அர்ஜூன். மேலும் இந்த விளம்பரத்தில் 20 மாறுபட்ட தோற்றங்களிலும் அர்ஜூன் நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தில் அர்ஜூனுடன் ரன்வீர் சிங்கும், ரொமானியாவும் நடித்துள்ளனராம்.