இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஒவ்வொரு நாளிலும் நான் புதிதாய் பிறந்த மாதிரி உணர்கிறேன், என இன்று(அக்., 10ம் தேதி) தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரேகா தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ரேகா. 1970-80களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ரேகா, சுமார் 15 ஆண்டுகள் அசைக்க முடியாத ஹீரோயினாக வலம் வந்தார். இடையில் சிலகாலம் நடிப்பதை நிறுத்திய ரேகா க்ரிஷ்-2 படத்தின் மூலம் ரீ-என்டரி ஆனார். தொடர்ந்து இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் நானி படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், நடிகை ரேகாவுக்கு இன்று 60வது பிறந்தநாள். 60வயதானாலும் இப்போதும் அழகு புயலாக இருக்கிறார். தனது 60வது பிறந்தநாளையொட்டி ரேடியோவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு நாளும் எனக்கு சிறப்பான நாள் தான். நான் எல்லா நாட்களும் கோயிலுக்கு செல்வேன். என்னைப்பொறுத்தவரை எல்லா நாளும் கொண்டாட்ட நாள் தான், ஒவ்வொரு நாளையும் நான் புதிதாய் பிறந்தது போன்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.