மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் பன்திறமை கொண்ட நடிகை கங்கனா ரணாவத். இவர், தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கும், ''தாணு வெட்ஸ் மானு-2''வில் நடித்து வருகிறார். இப்படத்தில் தடகள வீராங்கனையாக கங்கனா நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது அவர் டிரிபிள் ஜம்ப் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். டிரிபிள் ஜம்ப் விளையாட்டு என்பது வீரர்கள் ஓடி வந்து மணலில் தாவும் விளையாட்டு. இதனை கங்கனாவும் செய்து வருகிறார். படத்தில் காட்சிகள் அனைத்தும் ரியலாக வரவேண்டும் என்பதற்காக தானே முறைப்படி பயிற்சி எடுத்து நடிக்கிறார். இதற்காக கங்கனாவிற்கு சுனிதா துபே மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் விஷேச பயற்சி அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கூறுகையில், கங்கனா, தடகள டிரிம்பிள் ஜம்ப் வீராங்கனையாக நடிக்கிறார். அவருக்கு முறையான பயிற்சி அளித்து இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.