'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர், கம்போஸர் மரியா ரோஸ் வின்சென்ட். அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பெர்க்லி இசை கல்லூரியில் படித்து விட்டு வந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். உலக புகழ்பெற்ற இசை வடிவங்களின் உரிமத்தை வாங்கி தமிழ் படங்களில் பயன்படுத்தி வருகிறார்.
மரியா ரோஸ் தமிழில் இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட இருக்கிறார். அதன் முதல்கட்டமாக நீதான் என் ட்ரீம் கேர்ள் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஒரு காதலன் தன் காதலியை வர்ணித்து, நினைத்து, உருகி பாடுவது மாதிரியான பாடல்களை கொண்ட ஆல்பம் இது. சந்தோஷ் ஜெயகரன் பாடி உள்ளார். இதனை டிவோ நிறுவனத்தார் யு டியூப்பில் வெளியிட்டுள்ளனர். விரைவில் தமிழ்நாடு மலேசிய சேனல்களில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.