ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அமெரிக்கா மற்றும் கனடாவில் முகாமிட்டுள்ள ஹேப்பி நியூ இயர் படக்குழு அங்கு கலை நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். முதலாவதாக குகூள் நிறுவனத்திற்கு சென்ற ஷாரூக்கான், அபிஷேக், தீபிகா படுகோனே, போபன் இரானி, விவன் ஷா, இயக்குநர் பரா கான் உள்ளிட்டோர் அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் இணைந்து போட்டோ எல்லாம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்திற்கு சென்ற ''ஹேப்பி நியூ இயர்'' படக்குழுவுக்கு டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ., டிக் கான்ஸ்ட்லோ வரவேற்றார். அமெரிக்கா, கனடாவில் சுற்றுபயணத்தை முடித்த படக்குழு நேற்று இந்தியா திரும்பினர்.