இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகைகள் ஆலியா பட்டும், ப்ரணிதி சோப்ராவும். ைஹவே, 2 ஸ்டேட்ஸ் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆலியா, இப்போது பேஷன் டிசைனராகவும் மாறியிருக்கிறார், எதிர்வரும் குளிர்காலத்தையொட்டி, அவரே அதற்கு ஏற்ற ஆடைகளை தயார் செய்து வருகிறார். குறிப்பாக நடிகை ப்ரணிதி சோப்ராவுக்கு இவர் ஆடை வடிவமைத்து கொடுக்க இருக்கிறார்.
இதுகுறித்து ஆலியா பட் கூறியுள்ளதாவது, ப்ரணிதி சோப்ராவுக்கு, ஆடை வடிவமைப்பு செய்ய நான் ஆசைப்படுகிறேன். நான் உருவாக்கும் ஆடைகளை எல்லா பெண்களும் அணியலாம் 20 வயதில் உள்ள பெண்களிலிருந்து 30-40 வயதுடைய பெண்கள் வரை அணியலாம். எனது கலெக்ஷ்ன்கள் எல்லாம் எளிமையாக இருக்கும், இதுமுழுக்க முழுக்க நானே செய்தது, குளிர்காலத்தையொட்டி நானே இந்த ஆடைகளை உருவாக்கி வருகிறேன். எனது உடைகள் எல்லோருக்கும் பிடிக்கும், குறிப்பாக விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகளை அனைவரும் விரும்புவர். நான் இன்று இந்தளவுக்கு பேஷன் டிசைனிங்கில் முன்னேற காரணமே பேஷன் டிசைனர் மனிஷ் மல்கோத்ரா தான், எப்பவும் ஸ்டைலான உடைகளையும், புதுபுது டிசைன்களையும் கொடுத்து கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார்.