ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழில், இந்தியன், முதல்வன், பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இந்தியில் பிரபல நடிகையான இவர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார், தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார, அவரது முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. இந்தியில் பிரபல இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் புதிய படத்தில் மனிஷா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ராஜ்குமார் சொன்ன கதையை கேட்ட மனிஷாவுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது, இதனால் அவரது படத்தில் நடிக்க உடன் சம்மதம் சொல்லிவிட்டார். இந்தப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்குகிறது. இப்படத்தில் மனிஷாவுடன் பங்கஜ் கபூரும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். மனிஷா ஏற்கனவே 2001ம் ஆண்டு ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய, லஜா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.