'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சோனம் கபூரின் முன்னாள் காதலரான புனித் மல்கோத்ராவும் இஷா குப்தாவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டேட்டிங் செய்து வருவது தான் பாலாவுட்டின் தற்போது பேச்சாக உள்ளது. இந்த புதிய ஜோடி பற்றி நாளொரு புதுப்புது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. புனித் கடைசியாக நடித்த கோரி தேரி பியார் மைன் படத்தின் ப்ரமோஷன் விழாவில் இந்த ஜோடி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததாக கரீனா கபூர் சமீபத்தில் கூறி இருந்தார்.
புனித் நடித்த இந்த படத்தில் இஷாவும் ஒரு அயிட்டம் பாடலுக்கு ஆடி உள்ளார். இவர்களது உறவு பற்றி அவர்கள் எதுவும் கூறாத போதும், இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வதும், நெருங்கி பழகுவதுமாக உள்ளாதாக பாலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஷாவின் வீட்டின் முன் புனித்தின் கார் வெகு நேரம் நின்று கொண்டிருந்ததாம். பின்னர் இருவரும் இணைந்து காரில் வெளியே சென்று விட்டனராம்.
இத்தகைய தகவல்கள் ஒருபுறம் இருக்க, புனித் இருக்கும் போது தான் பாதுகாப்பாக உணர்வதாக இஷாவும் கூறி வருகிறாராம்.