தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எழுத்தாளர் சேத்தன் பகத், மோஹித் சூரி மற்றும் ஏக்தா கபூர் ஆகியோருடன் இணைந்து ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தை தயாரிக்க உள்ளார். அவர் எழுதிய ஹாப் கேர்ள்பிரண்ட் நாவலை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இந்த நாவல் மும்பை மற்றும் டில்லியில் இன்று (அக்டோபர் 1) வெளியிடப்பட உள்ளது.
இந்த நாவலை தழுவி எடுக்க உள்ள ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தில் ரியா கதாபாத்திரத்தில் ஆலியாபட் நடிக்க உள்ளாராம். செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் படிக்கும் டில்லியைச் சேர்ந்த வசதியான வீட்டு பெண்ணாக ஆலிபட் இப்படத்தில் நடிக்கிறார். கிருத்தி சனேன் மற்றும் ஹூமா குரேசி ஆகியோரும் இப்படத்தில் நடக்க உள்ளனர்.
2 ஸ்டேட்ஸ் படத்தில் அனன்யா சுவாமிநாதன் வேடத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். சேத்தன் பகத்தின் மற்றொரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஆலியா பட்டின் நடிப்பு பாராட்டும் படியாக இருந்ததால் இந்த படத்திலும் அவரையே புக் செய்துள்ளார்களாம்.