'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தமிழில், ''தாம் தூம்'' படத்தில் நடித்த கங்கனா ரணாவத், பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருக்கிறார். சமீபத்தில், அவரது 'குயின்' படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருப்பவர், அடுத்தப்படியாக மீண்டும் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆனந்த் ராய் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இவர்களது கூட்டணியில் வெளியான ''தானு வெட்ஸ் மானு'' படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதில் கங்கனா, அரியானாவின் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். இதனையொட்டி, அவர் அம்மாநிலத்திற்கு சென்று அந்த ஊர் மாணவர்களை சந்தித்து அவர்களது நடை, உடை, பேச்சு வழக்கு உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொள்ள இருக்கிறார். கங்கனாவுடன் இயக்குநர் ஆனந்த் ராய்யும் செல்ல இருக்கிறார்.