தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாக இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக்கான் உடன் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள ஹேப்பி நியூ இயர் படக்குழு அங்கு ஒவ்வொரு ஊருக்கு சென்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஹேப்பி நியூ இயர் படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி அரேனா, சிகாகோ போன்ற ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் பராகான், தீபிகா, மல்லிகா அரோரா, ஷாரூக், அபிஷேக், போபன் இரானி, விவன் ஷா, கனிகா கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என்று பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஷாரூக்கான் பார்வையாளர்களுடன் விளையாடினார். இதில் அவருடன் போட்டி போட்டு வெற்றி பெற்றவர்களுக்கு லெக்ஸ்சுரி பைக் வழங்கப்பட்டது.