சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ சசி கபூர். 76 வயதான இவருக்கு கடந்த செப்., 21ம் தேதி, சுவாச கோளாறு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது, இதன்காரணமாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த சசி கபூர் உடல்நலம் தேறினார். இதனையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், தற்போது சசி கபூர் நலமாக இருக்கிறார். மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு செல்லும் போது அவர் மிகவும் சந்தோஷமாக சென்றார் என்றனர்.
உலக புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவரான சசிகபூர் 160 படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். 2010ம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.