ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினேகா இதுவரை 20க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். உன் சமையல் அறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சரு பிரியாணி படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக ஆத் ஷர்மா நடிக்கிறார். இதில் சினேகா சமந்தாவின் அக்காவாக நடிப்பதாக கூறப்படுகிறது. டி.டி.வி.தன்யா, ராதா கிருஷ்ணா ஆகியோர் ஹாசினி கிரியேஷன் பேனரில் தயாரிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
சினேகாவுக்கு தற்போது தமிழில் கைவசம் படங்கள் எதுவுமில்லை. சரத்குமாருடன் நடித்த விடியல் பாடம் பாதியில் நிற்கிறது.