தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாருலதா படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ப்ரியாமணியை சுத்தமாக கைகழுவி விட்டது. அதனால் தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவில் தஞ்சமடைந்துள்ள ப்ரியாமணி, ஆரம்பத்தில் படுகவர்ச்சியாக நடித்து வந்தவர் தற்போது ஆக்சன் நடிகையாகவும் உருவெடுத்து நிற்கிறார். அதற்காக தனது உடல் எடையையும் கணிசமான அளவு குறைத்திருக்கிறார்.
இதில் மலையாளத்தில் ஜெயராமுடன் எங்களுட வீட்டிலே அதிதிகள் என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயின் வேடத்தில் நடித்து வரும் ப்ரியாமணி, கன்னடத்தில் வியூகம் என்றொரு படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜயசாந்தி கெட்டப்பில் தோன்றும் ப்ரியாமணி, சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் போலீசாக நடித்தபோது முறையான சண்டை பயிற்சிகளை எடுத்திருந்த ப்ரியாமணி, இந்த படத்தில் அதைவிட அதிரடியான சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம். மேலும், மலையாளம், தெலுங்கில் ப்ரியாமணிக்கு ஓரளவு மார்க்கெட்டில் இருப்பதால் இப்படத்தை அந்த மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்களாம்.
இப்படி கிளாமர் கதாநாயகியில் இருந்து ஆக்சனுக்கு தாவி விட்ட ப்ரியாமணி, இனிமேல் வில்லத்தனமான நெகடீவ் ரோல்கள் கிடைத்தாலும் தாராளமாக நடிப்பாராம்.