Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டுக்கு படையெடுக்கும் பாகிஸ்தான் நடிகர்கள்! ஸ்பெஷல் ரிப்போர்ட்

23 செப், 2014 - 22:40 IST
எழுத்தின் அளவு:

இந்திய சினிமாவில், மிகப்பெரிய சினிமா வியாபாரத்தை கொண்டது பாலிவுட் உலகம். மும்பையை தலைமையாக கொண்டு செயல்படும் பாலிவுட்டில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக நமது அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகையரும் பாலிவுட்டை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அப்படி சமீபத்தில் பாலிவுட்டுக்கு வந்த பாகிஸ்தான் நடிகர்கள் யார் யார் என்பதை பற்றிய சிறப்பு கட்டுரை இது...

பவாத் கான்

இந்திய டெலிவிஷன்களில் ஒளிப்பரப்பான ஜிந்தகி குல்சார் ைஹ, ஹம்சேபர் போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானவர் பவாத் கான். இவர் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் படம் கூப்சூரத். சமீபத்தில் வெளியான இந்தப்படத்தில் பவாத் ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பின்னர் பவாத்திற்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

ஹூமைமா மாலிக்

பாகிஸ்தானின் அடுத்த வரவு ஹூமைமா மாலிக். பாலிவுட்டில் இவரது முதல்படமே முத்த மன்னன் இம்ரான் ஹாசிமியின், ராஜா நட்வர்லால். இந்தப்படத்தில் மிகவும் செக்ஸியாக நடித்து இருந்தார் ஹூமைமா, கூடவே இம்ரான் உடன் இரண்டு-மூன்று முத்தக்காட்சிகளிலும் துணிந்து நடித்து இருந்தார்.

இம்ரான் அபாஸ் நக்வி

பாகிஸ்தானில் மாடல் மற்றும் நடிகராக இருந்தவர் இம்ரான் அபாஸ் நக்வி. ஹாட் அண்ட் ேஹண்ட்சம் நடிகரான இவர், இந்தியாவில் மேரா நாசிப் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சமீபத்தில் இவர், விக்ரம் பட் இயக்கிய கிரியேச்சர் 3டி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்தார். இந்தப்படம் ஓரளவுக்கு நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. முன்னதாக கிரியேச்சர் 3டி படத்திற்கு முன்பாக ஆஷிக்-2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

அலி ஜாபர்

பாகிஸ்தானில் பிரபல நடிகரான அலி ஜாபர், அங்குமட்டுமல்ல, பாலிவுட்டிலும் கால்பதித்து பிரபலமாகிவிட்டார். பாலிவுட்டில், இன்று பல்வேறு திறமைகளை உடைய நடிகர்களில் அலி ஜாபரும் ஒருவர். நடிகராக மட்டுமல்லாது பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். தேரி பின்லேடன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அலி ஜாபர், அடுத்தப்படியாக ஜாஸ் ராஜ் இயக்கிய, மேரி பிரதர் கி துல்கான் படத்தில் கத்ரீனா கைப் உடன் நடித்தார்.

வீணா மாலிக்

பாகிஸ்தானில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி புயல் வீணா மாலிக். தால் மெயின் குச் கலா ஹாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார், கூடவே சில படங்களில் குத்தாட்டமும் போட்டு வருகிறார். பாலிவுட் மட்டுமல்லாது, சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிரபலமானார். அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சாஷா அஹா

பிரபல நடிகையும், பாடகியுமான சல்மா அகாவின் மகள் சாஷா அகா. பாலிவுட்டில், அவுரங்கசெப் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படத்தில் அர்ஜூன் கபூர் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் இந்தப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இப்போது டெசி கத்தே படத்தில் நடித்துள்ளார்.

சாரா லோரன்

பாலிவுட்டில், சாரா லோரன் என்பதை விட மோனாலிசா என்று சொன்னால் தான் பலருக்கும் இவரை தெரியும். பாகிஸ்தானில் உள்ள அழகான மற்றும் ஹாட் நடிகைகளில் சாரா லோரனும் ஒருவர். பாலிவுட்டில் கஜ்ராரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின் சில படங்களில் நடித்த சாரா, தற்போது பர்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என்ன தான் பாகிஸ்தானில் இருந்து நடிகர், நடிகையர் வந்தாலும் சரி, இல்லை அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து நடிகர், நடிகையர் வந்தாலும் சரி, இங்குள்ள ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அவர்கள் நடித்தால் மட்டுமே நிலைக்க முடியும், இல்லையேல் ஒருசில படங்களோடு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். மேற்சொன்ன நடிகர், நடிகையரில் எவ்வளவு பேர் பாலிவுட்டில் நிலைத்து நிற்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in