'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
1997ல் வசந்த் இயக்கிய படம் நேருக்கு நேர். டைரக்டர் மணிரத்னம் தயாரித்த இந்த படத்தில் விஜய் நாயகனாக நடித்தார். இன்னொரு நாயகனாக இந்த படத்தில்தான் சூர்யா அறிமுகம் ஆனார். இதில் விஜய்க்கு ஜோடியாக கெளசல்யாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர். அந்த படத்தின் நேருக்கு நேர் என்ற தலைப்பை, ஜீவா படத்திற்கு பிறகு தான் இயக்கும் படத்திற்கு சுசீந்திரன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ, இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக சம்ஸ்க்ருதி செனாய் என்ற புதுமுகம் நடிக்கிறாராம். அக்டோபர் 6-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி 30 நாட்களில் டோட்டல் படப்பிடிப்பும் முடிகிறதாம்.
இந்த ஸ்ரீ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு ஒரு பெண் இயக்குனர் இயக்கிய சோம்ப்டி என்றொரு படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் வியாபாரம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது.