இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழுக்கு ஆர்னால்ட், தெலுங்குக்கு ஜாக்கிசான்...என்ற பேச்சு சில வாரங்களுக்கு முன்பாகவே 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் செய்தியாக வலம் வந்தது. அதன் பின் ஆர்னால்ட்டே வீடியோவில் தோன்றி நான் சென்னைக்கு வருகிறேன் என்று சொன்ன போதுதான் அனைவருமே நம்ப ஆரம்பித்தார்கள். அப்படியே ஆர்னால்ட்டும் வந்தார், சென்றார்...அடுத்து தெலுங்கு 'ஐ' யின் 'மனோகரடு' படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ளது.
இந்த விழாவிற்கு ஜாக்கி சான் வந்து கலந்து கொள்வார் என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடந்த 'ஐ' இசை விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதே போன்று 'மனோகரடு' இசை வெளியீட்டு விழாவில் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி கலந்து கொள்ள இருக்கிறாராம். அவரோடு வேறு முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில், சென்னையில் நடைபெற்ற 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தைத் தவிர வேறு எந்த முன்னணி தமிழ் நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தெலுங்கில் அப்படி இல்லாமல் வேறு சில முன்னணி நட்சத்திரங்களையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கிலும் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த எதிர்பார்ப்பை இசை விழா மூலமும் இன்னும் அதிகப்படுத்தவே நினைப்பார்கள் என்றே தெரிகிறது. 'மனோகரடு' இசை விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.