'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'ஐ' பட டீஸர் ஹிட்சை விட 'வம்பு' நடிகரின் முத்த வீடியோ அதிக ஹிட்சை அள்ளிவிடும் போலிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அந்த வீடியோவைப் பற்றிய பேச்சுத்தான் பரபரப்பாக இருக்கிறது. வம்பு நடிகரும் அது நானே அல்ல என்று சொன்னாலும் அது வழக்கம் போன்ற மறுப்புதான் என்கிறார்கள். ஆனால், அந்த குறிப்பிட்ட வீடியோவை வெளியிட்டதே அந்த நடிகர்தான் என்று விஷயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன் இது போன்ற விஷயங்களை அவரே வெளியிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு நயன நடிகையுடன் காதலில் இருந்து அவரை விட்டுப் பிரிந்ததுமே அவருடன் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்ட புகைப்படத்தை வெளியில் விட்டார் என்று உதாரணம் சொல்கிறார்கள் அவர் நடித்து எந்த படமும் கடந்த சில வருடங்களாக வெளிவராத நிலையில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களும் எப்போது வெளிவரும் என்று தெரியாத நிலையில் தன்னைப் பற்றிய எந்த செய்தியுமே மீடியாக்களில் வருவதில்லை என்ற வருத்தத்தில் இருந்தாராம். இது போன்று ஏதாவது செய்தால் தன்னைப் பற்றி அதிகம் பசுவார்கள் என்ற எண்ணத்தில்தான் அவர் இப்படி செய்திருப்பார் என்கிறார்கள்.