சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
இந்திரா குமார் இயக்கத்தில், ரேகா நடித்து வரும் புதியபடம் சூப்பர் நானி. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரேகா ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரேகா உடன் சர்மான் ஜோஷி, ஸ்வேதா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தை அக்டோபர் 24ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளியான போது ரேகாவின் தோற்றம் முந்தைய மதர் இந்தியாவை ஞாபகப்படுத்தியது, இதனிடையே தற்போது வெளியாகி இருக்கும் மற்றொரு ஸ்டில்லில் ரேகா, நடிகை மதுபாலாவை ஞாபகப்படுத்துகிறார். இதுப்பற்றி விசாரித்ததில், சூப்பர் நானி படத்தில், ஒருபாட்டில், நடிகை ரேகா, மாஜி ஹீரோயின்கள் மதுபாலா, வாகீதா ரஹ்மான் ஆகியோரை போன்று உடையணிந்து அவர்கள்
நடித்த முகால்-இ-ஆஷாம் மற்றும் ஹவுரா பிரிட்ஜ் போன்ற படங்களில் அவர்கள் ஆடியதை போன்று இவரும் ஆடி, நடித்துள்ளாராம்.
இதுகுறித்து இயக்குநர் கூறியதாவது, மதுபாலா நடித்த முகால்-இ-ஆஷாம் படத்தில் உள்ள பியார் கியா... பாடலுக்கு ரேகா ஆடியுள்ளார். இதற்கு சபீனா கான் நடனம் அமைந்துள்ளார். படத்தில் இப்படியொரு காட்சி இருக்கிறது என்று ரேகாவிடம் சொன்னபோது, அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஆடினார். நிஜத்தில் மதுபாலாவே ஆடியது போன்று அற்புதமாக ஆடியுள்ளார் ரேகா. இந்திய சினிமாவில் மிகவும் கொண்டாடப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூறியுள்ளார்.